அத்தியாவசியக் காரணங்களின்றி பிரான்ஸிற்குள் விமானம் மூலம் வருவதற்கோ அல்லது பிரான்ஸிலிருந்து வெளியேறுவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, அத்தியாவசியக் காரணங்களின்றி பிரான்சிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே செல்லவோ, இல்லை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து பிரான்ஸிற்குள் வரவோ, பெரும் கட்டுப்பாடுகளும் சோதனைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து, அத்தியாவசியக் காரணங்கள் இன்றி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே, விமானத்தில் செல்ல இருந்த, 729 பேரிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துகளிற்கான அமைச்சர் ஜோன்-பப்திஸ்த் ஜெபாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மற்றும் புதிய மாறுபாடு காரணமாக இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளனர்.