நோர்வேயில் நிலச்சரிவில் சிக்கிய இருவர், ஆறு வார காலத்திற்கு பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு நோர்வேயில் உள்ள ஜெஜெர்ட்ரம் நகராட்சியின் நிர்வாக மையமான அஸ்க் நகரில், கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி அஸ்க் கிராமத்தில் ஒரு குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
ஒஸ்லோவிலிருந்து 25 கிலோமீட்டர் (16 மைல்) வடகிழக்கில் அமைந்துள்ள கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட பகுதியில், குறைந்தது ஒன்பது கட்டடங்களை நிலச்சரிவு அழித்தது.
கடந்த மாதம், உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதில் நம்பிக்கை இல்லை என்று அதிகாரிகள் கூறியதுடன், உறைபனிக்குக் கீழே வெப்பநிலையில் தேடலை நிறுத்தியது.
வெப்பத்தைக் கண்டறியும் கெமராக்கள் கொண்ட ஹெலிகொப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் அஸ்கில் உள்ள பாழடைந்த மலைப்பாதையில் பறந்தன.
முன்னதாக இந்த நிலச்சரிவில் சிக்கி 7பேர் வரை உயிரிழந்ததோடு 1 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
2005ஆம் ஆண்டில், நோர்வே அதிகாரிகள் அஸ்க் பகுதியில் குடியிருப்பு கட்டடங்களை கட்ட வேண்டாம் என்று மக்களை எச்சரித்தனர். இது நிலச்சரிவுகளுக்கு ‘அதிக ஆபத்து நிறைந்த பகுதி’ என்று கூறியது. ஆனால் தசாப்தத்தின் பிற்பகுதியில் வீடுகள் கட்டப்பட்டன.
மத்திய நோர்வேயில் 1893ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் 116பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.