பிரான்ஸ் தலைநகர் பரிஸில் சுகாதார விதியை மீறியதற்காக 256 வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து கடந்த 10ஆம் திகதி வரை இந்த வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் 95 உணவகங்கள் உள்ளடங்குகின்றன.
நாள் ஒன்றில் 300 இல் இருந்து 400 வரையான உணவகங்கள், மது விடுதிகள், தேநீர் அருந்தகம் போன்றவை சோதனையிடப்படுகின்றன.
இதுதவிர டிசம்பர் 15ஆம் திகதியில் இருந்து 1.9 மில்லியனுக்கும் அதிகமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, 177,000க்கும் அதிகமான கடை உரிமையாளர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.