பிரான்ஸில் நேற்று (சனிக்கிழமை) புதிதாக 21 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை இதற்கு முன்தினம் வெள்ளிக்கிழமை (20,701) பதிவாகிய நோயாளிகளை விட அதிகம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் இதுவரை தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 34 இலட்சத்து 48 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை பிரான்ஸில் மேலும் 199 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது
உலகளவில் ஏழாவது அதிக இறப்பு எண்ணிக்கையை கொண்ட பிரான்ஸில், தொற்றைக் கட்டுப்படுத்த போராடும் அண்டை நாடுகளில் நடவடிக்கைக்கு மாறாக புதிய நடவடிக்கையை எடுத்து.
குறிப்பாக டிசம்பர் 15 முதல் இரவு 8 மணிக்கும் மாலை 6 மணிக்கும் என இரு வேளைகளில் நாடு முழுவதும் இரவுநேர ஊரடங்கை பிரான்ஸ் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.