பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையில் அடுத்த வாரம் ஜி 7 தலைவர்களின் உச்சிமாநாடு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா தடுப்பூசிகளின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்கும் எதிர்காலத்தில் தொற்றைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டி குறித்த உச்சிமாநாடு நடைபெறும் என அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.
7 நாடுகளுடனான குறித்த மாநாடு கடந்த வருடம் ஏப்ரல் முதன் முறையாக கூடிய நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பிடன் பதவியேற்றுள்ள நிலையில் பெரும் எதிர்பாப்புடன் இருப்பதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆரம்ப பதிலைக் கொடுக்கும் என்றும் தேசியவாத மற்றும் பிளவுபடுத்தும் அரசியலை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.