கொரோனா தொற்றின் நான்காவது அலையினை ஈரான் எதிர்கொள்ளக் கூடும் என அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரௌஹானி எச்சரித்துள்ளார்.
நாட்டின் பல பாகங்களில் தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி அவரை இதனை தெரிவித்துள்ளார்.
எனவே தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி கேட்டுக்கொண்டார்.
ஈரானில் இதுவரை கொரோனா தொற்றினால் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 59,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவிலிருந்து, இரண்டு மில்லியன் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகளை ஈரான் இறக்குமதி செய்துள்ளதுடன் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் தொடங்கியுள்ளது.