சமூக அளவில் கொரோனா தொற்று உறுதியான மூன்று பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் மிகப்பெரிய நகரமான அக்லாந்தை முடக்க பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் மூன்று நாட்கள் நீடிக்கும் என்றும் குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றைக் கையாண்டதற்காக நியூசிலாந்து பாராட்டுக்களைப் பெற்றுள்ளதுடன் பல மாதங்களாக அங்கு சமூக ரீதியில் தொற்று எதுவும் பதிவாகவில்லை.
ஐந்து மில்லியன் மக்கள்தொகை கொண்ட நியூசிலாந்தில், கொரோனா தொற்றினால் 2,300 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 25 இறப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.