கினியாவில் எபோலா தொற்றினால் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் இரத்தப்போக்கு காரணமாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கினியாவில் தொடங்கிய மேற்கு ஆபிரிக்காவில் பரவிய எபோலா தொற்றுநோயால் 2013 மற்றும் 2016 க்கு இடையில் 11,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சிம்பன்சிகள், பழ வௌவால்கள் மற்றும் வன மான் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பு மூலம் மனிதர்களுக்கு எபோலா தொற்று பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது.