மேற்கு ஜனநாயக கொங்கோவில் சுமார் 700 பயணிகளுடன் ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 60பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முந்தைய இரவு, மாய்-நோம்பே மாகாணத்தில் உள்ள லாங்கோலா எகோட்டி கிராமத்திற்கு அருகே மூழ்கிய கப்பலில் 700பேர் இருந்ததாக மனிதாபிமான நடவடிக்கை அமைச்சர் ஸ்டீவ் ம்பிகாய் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இதுவரை மீட்புக் குழு 60 உயிரற்ற உடல்களையும் 300 உயிர் தப்பியவர்களையும் மீட்டுள்ளது. இந்த கப்பல் விபத்துக்குப் பின்னர் இன்னும் பலரைக் காணவில்லை.
மூழ்குவதற்கு முக்கிய காரணம் பொருட்களின் அதிக சுமை மற்றும் படகில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் தான்’ என கூறினார்.
படகு கின்ஷாசாவிலிருந்து புறப்பட்டு ஈக்குவாடோர் மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்தது.