இங்கிலாந்தில் ஜனவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் அளவுகளில், வலுவான சரிவு ஏற்பட்டுள்ளது என்று தொற்றுநோயைக் கண்காணிக்கும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
முடக்கநிலை தொடங்கியதிலிருந்து இங்கிலாந்து முழுவதும் தொற்றுநோய்கள் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துவிட்டதாக லண்டனின் இம்பீரியல் கல்லூரி ஆய்வு கண்டறிந்துள்ளது. லண்டனில் 80 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டது.
ஆனால், வைரஸ் அளவு இன்னும் அதிகமாக உள்ளது. பெப்ரவரி 4ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை 200 சோதனைகளில் ஒன்று நேர்மறையானது. இது செப்டம்பர் 2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் காணப்பட்ட நிலைகளுக்கு ஒத்ததாகும்.
இவை இடைக்கால கண்டுபிடிப்புகள் என்றாலும், தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களிடமிருந்து 85,000க்கும் மேற்பட்ட சோதனைகளின் அடிப்படையில், சமூக விலகல் மற்றும் கட்டுப்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று அவை பரிந்துரைக்கின்றன.
கொரோனா வைரஸ் பரவுவதில் தடுப்பூசிகளின் தாக்கம் குறித்த புதிய தரவைப் பெற பிரதமர் போரிஸ் ஜோன்சன் தயாராகும் நிலையில், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.