அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருந்த பொது முடக்கம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் பொது முடக்கம் இரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் நடைமுறையில் இருந்த பொது முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளதால், அங்கு பாடசாலைகள் மற்றும் வர்த்தகம் வழக்கம்போல் செயற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், அங்கிருந்து விமானப் போக்குவரத்து எப்போது தொடங்கும் என்பது குறித்தும், அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரை காண இரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என்பது குறித்தும் அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
இதேபோல், நியூஸிலாந்து தலைநகர் ஒக்லாந்தில் அமுலில் இருந்த பொது முடக்கமும் இ ரத்து செய்யப்பட்டது. ‘இது நல்ல செய்தி’ என பிரதமர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பைசர் மற்றும் ஜேர்மனியின் பயோஎன்டெக் உருவாக்கிய 142,000 டோஸ் தடுப்பூசியை அவுஸ்ரேலியாவும், 60,000 பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளை நியூஸிலாந்தும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.