அமைச்சர் சரத் வீரசேகர, அரசாங்கத்தின் தவறுகளை மறைப்பதற்காக புதிய விவகாரங்களை உருவாக்குகிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குல் சம்பவம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும்போதே அநுர குமார திசாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அநுர மேலும் கூறியுள்ளதாவது, “சரத் வீரசேகர வெளியிடும் கருத்துக்கள் சிறுப்பிள்ளைத்தனமாக காணப்படுவதுடன் பாரத்தூரமானதாக இருக்கின்றது.
மேலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, சுமார் 15 மாதங்களாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன்போது இவ்விவகாரம் தொடர்பாக என்னிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென எவரும் குறிப்பிடவில்லை.
இந்நிலையில் , என்னிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் திடீரென சரத் வீரசேகரவுக்கு வருவதற்கான காரணம் என்ன?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.