சீனாவில் இதுவரை 74.96 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஆணைக்குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது.
1.4 பில்லியன் மக்கள் தொகையில் 40 விகிதமானவர்களுக்கு ஆண்டின் நடுப்பகுதியில் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் நோக்கத்துடன் அதன் தடுப்பூசி நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
மேலும் உலகளவில் இதுவரை 70 மில்லியனுக்கும் அதிகமான சினோவக் பயோடெக்கின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் சீனாவின் சுகாதார ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை சீனாவுக்கு வரும் மக்களுக்கு விசா வழங்கல், விமானங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்கான வேறுபட்ட கொள்கைகளை செயற்படுத்துவது குறித்தும் சீனா பரிசீலித்து வருகிறது.