போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக தற்போதைய ஆட்சியை எவராலும் கவிழ்க்க முடியாதென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அத்துருகிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல சவால்களுக்கு முகம் கொடுத்தபோதிலும் சிறந்த செயற்றிட்டங்களை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம்.
இதேவேளை கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிர்த்தரப்பினர் தொடர்ந்து முன்வைத்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றியீட்டினர்.
அத்தகைய நிலைமையை எமது ஆட்சியில் மேற்கொள்ள முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.