தாய்லாந்தில் மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் முன்னெடுத்த போராட்டத்தில், 33பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தலைநகர் பேங்கொக்கில் உள்ள அரண்மனை முன்பு திரண்டிருந்த ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள், அரண்மனை வளாகத்துக்குள் நுழைய முயன்ற போது, ஏற்பட்ட இருதரப்பு மோதலில் இவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதில் 13 பொலிஸார் மற்றும் இரண்டு ஊடகவியலாளர்கள் அடங்குவர்.
அத்துடன்,இந்தப் போராட்டம் தொடர்பாக 30க்கும் அதிகமானோரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும், மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் கடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து அறவழியில் போராட்டங்களை நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.