வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 314 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர்களில் 40 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
ஏனைய 274 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளனர்.
அதன்படி, 52 பேர் திருகோணமலை மாவட்டத்தில் இருந்தும் 30 பேர் களுத்துறை மாவட்டத்தில் இருந்தும் 29 பேர் கம்பஹா மாவட்டத்திலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஏனைய 163 பேரும் ஏனைய மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 514ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 551ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.