நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன.
சுங்க கட்டளை சட்டத்தின் 10 ஆவது சரத்துக்கு உட்பட்ட இறக்குமதி சுங்க வரி தொடர்பிலான பரிந்துரைகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் நிதியமைச்சரினால் விதிக்கப்பட்டுள்ள 2 ஒழுங்கு விதிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளைகள் குறித்து இன்றைய அமர்வில் விவாதத்திற்கு எடுத்துக்கொளள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாலை 4.30 மணிதொடக்கம் 5.30 வரையில் ஆளும் தரப்பினால் முன்வைக்கப்படவுள்ள சபை ஒத்திவைப்பு பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறுவுள்ளது.
இதேவேளை கடந்த 10ஆம் திகதி ஆரம்பமான ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை மறுதினம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.