நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும்போது உறுப்பினர்கள் சுற்றித் திரிவதையும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமருமாறும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ஆரம்பமாகியபோது, சில உறுப்பினர்கள் சுற்றி நடப்பதும் மற்றவர்களுடன் கலந்துரையாடுவதுமாக இருந்தனர்.
இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற அதிகாரிகளால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து அமர்வுகள் நடைபெறும்போது தனித்தனியே கலந்துரையாடலை நடத்த வேண்டாம் என்றும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமருமாறும் சபாநாயகர், நாடளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.