அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் போல்டர் பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸாருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னதாக இந்த தாக்குதலில் உயிரிழந்த 51 வயதான எரிக் டேலி என்ற பொலிஸ் அதிகாரிக்கு மரியாதை செலுத்துமாறு போல்டர் பொலிஸ்துறை டுவீட் செய்தது.
இதனடிப்படையில், 2010ஆம் ஆண்டு முதல் படையில் சேவையாற்றிய எரிக் டேலிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்று (திங்கட்கிழமை) டேபிள் மேசா பகுதியில் உள்ள கிங் சூப்பர்ஸ் பல்பொருள் அங்காடிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர், அங்கிருந்தவர்களை சராமரியாக சுட்டுத்தள்ளினார். இதில் 10பேர் உயிரிழந்தனர்.
சந்தேகநபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மர்ம நபர் துப்பாக்கி சூட்டை ஏன் நடத்தினார் என்பது குறித்த விபரங்கள் உனடியாக வெளியிடப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் நடந்த கொலரோடா மாகாண ஆளுனர் ஜாரெட் பொலிஸ் கூறுகையில், ‘இந்த நிகழ்வை பார்க்கும்போது என் இதயம் உடைந்து போகிறது. இது புத்தியில்லாத சோகம்’ என கூறினார்.