நடிகை ராஷ்மிகா மந்தானாவின் நடிப்பு தன்னை மலைக்க வைத்ததாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் திரைப்படம் குறித்து கருத்த தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “ நடிகை ராஷ்மிகா நான்கு மொழிகளை பேசுவார். அவருக்கு வட இந்தியாவிலும் இரசிகர்கள் உள்ளனர்.
படப்பிடிப்பில் லூட்டி அடித்தப்படி இருப்பார். ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் ஷாட்டுக்குள் வந்தவுடன் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்.
அவரது நடிப்பு என்னை மலைக்க வைத்தது. இந்திய சினிமாவில் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.