இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக 54 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின்போது, மீனவர்களின் ஐந்து மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், கிளிநொச்சி மாவட்டம் பூநகரி – இரணைத்தீவுக் கடற்பகுதியில் வைத்து 20 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு றோலர் படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கிளிநொச்சியில் கைதாகியுள்ள மீனவர்கள் இன்று கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்படவுள்ள அதேவேளை, ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.