வங்கதேசத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் இடம்பெற்ற மோதலில் சிக்கி, 4பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக வங்கதேசத்திற்கு சென்றிருந்தார்.
இதன்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்டகாங் மற்றும் டாக்கா ஆகிய நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
சிட்டகாங் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை காரணமாக மோதல் ஏற்பட்டு, பதற்றம் அதிகரித்துள்ளது.
குறித்த பதற்றத்தை அசாதாரன நிலைமைக்கு கொண்டுவருவதற்கு பொலிஸார் முயற்சித்தபோதும் அது தோல்விலேயே முடிவடைந்தது.
அதனைத் தொடர்ந்து, கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீர் பீய்ச்சி, போராட்டக்காரர்களை அவ்விடத்தில் இருந்து வெளியேற்ற முயன்றனர்.
இருப்பினும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டமையினால் பொலிஸார் ரப்பர் குண்டுகளை வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுவதவாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.