ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் வைரஸ் தொற்றினால் 75ஆயிரத்து 10பேர் உயிரழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட எட்டாவது நாடாக விளங்கும் ஸ்பெயினில் இதுவரை 32இலட்சத்து 55ஆயிரத்து 324பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஏழாயிரத்து 586பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 590பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 64ஆயிரத்து 67பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 830பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 30இலட்சத்து 16ஆயிரத்து 247பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.