பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் ஏழு இலட்சத்து இரண்டாயிரத்து 856பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 30ஆவது நாடாக விளங்கும் பிலிப்பைன்ஸில், இதுவரை 13ஆயிரத்து 149பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஒன்பதாயிரத்து 838பேர் பாதிக்கப்பட்டதோடு 54பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால், ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து 18பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 785பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்து 80ஆயிரத்து 689பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.