அயர்லாந்தில் ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து 5 கி.மீ பயண தடையை நீடிப்பது குறித்து அமைச்சரவை பரிசீலிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அயர்லாந்து குடியரசில் கொவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஐரிஷ் அரசாங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதத்திலிருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என தாவோசீச் மைக்கேல் மார்ட்டின் சுட்டிக்காட்டியுள்ளார்.
விளையாட்டு, வெளிப்புற கூட்டங்கள் மற்றும் கட்டுமானத்திற்கான கட்டுப்பாடுகளுக்கான எளிதாக்கல்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.