சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 600,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
அவசரகால பயன்பாட்டிற்கு இலங்கையில் சினோபோர்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் இலங்கையில் உள்ள சீனர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் என அரசாங்கம் கூறியுள்ளது.
அத்தோடு சினோபோர்ம் தடுப்பூசியை இலங்கையர்களுக்கு செலுத்துவது குறித்து உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்திற்காக காத்திருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அண்மையில் சினோபோர்ம் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் அந்நாட்டு ஜனாதிபதிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.