மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் உள்ளிட்ட ஏழு பேர் மார்ச் 17ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழ்வரை பிணையில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட முறிகள் ஏலத்தில், தவறான முறையில் 50 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய முறிகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ரவி கருணாநாயக்க உட்பட ஏழு பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.