அமெரிக்காவின் தடைகளை மீறி ஈரானிடமிருந்து சீனா எண்ணெய் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த வார இறுதியில் இந்த கூட்டணி அடுத்த தசாப்தத்தின் கால் நூற்றாண்டு பகுதி வரை தொடரும் வகையில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.
இதில் வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் தடுமாறிவரும் ஈரானிடமிருந்து சீனா, எண்ணெய் வாங்கும் வகையிலான ஒப்பந்தத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அமெரிக்காவின் தடையால் ஈரானின் பொருளாதாரம் பாதிப்படைந்திருந்த நிலையில், எண்ணெய் விற்பனை அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மீதான ஈரானின் செல்வாக்கை அதிகரிக்கும்.
சர்வதேச வல்லமை பெறுவதற்கான சீனாவின் 70 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளில் முதலீடு செய்யும் திட்டத்தின் ஒரு விரிவாக்கமாகவே இந்த ஒப்பந்தம் உள்ளது.