இன அல்லது மத ரீதியின் அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யக்கூடாது என்ற முடிவை பாராட்டி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரெல் அமைப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளது.
தற்போதுள்ள அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ பெயர்களில் மத அல்லது இனக் கருத்துக்களைத் திருத்துவதற்குரிய கால அவகாசத்தை வழங்குவதற்கான முற்போக்கான முடிவு ஜனநாயகத்தின் அடையாளம் என்றும் சுட்டிகாட்டப்பட்டியுள்ளது.
அதன்படி தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை மீளாய்வு செய்யவும், அரசியலில் ஈடுபடாதவர்களின் பதிவை இரத்து செய்வதற்கான ஒரு முறையை வகுக்கவும் பெஃப்ரெல் அமைப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் கட்சிக்குள் குறைந்தபட்சம் ஒரு முக்கிய பதவியை பெண்களுக்கு வழங்குமாறு அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.