வேல்ஸில் உள்ள பப்கள் மற்றும் உணவகங்கள் மே மாத இறுதியில் ஸ்பிரிங் வங்கி விடுமுறைக்கு உட்புறத்தில் மீண்டும் திறக்கப்படலாம்.
கொவிட் தொற்றுகள் குறைவாக இருந்தால், மே 10ஆம் திகதி முதல் இரண்டு வீடுகளை சேர்ந்தவர்கள், வீட்டிற்குள் சந்திக்க முடியும் என்றும் வேல்ஷ் அரசாங்கம் கூறியது.
விருந்தோம்பல்துறை ஏப்ரல் 26ஆம் திகதி முதல் வெளிப்புறங்களில் திறக்கப்படலாம். மே 3ஆம் திகதி முதல், 30பேர் வரை வெளியில் நடைபெறும் திருமண வரவேற்புகளில் பங்கேற்கலாம்.
உடற்பயிற்சி கூடங்கள், ஓய்வு நிலையங்கள் மற்றும் உடற்பயிற்சி வசதிகளும் மே 10ஆம் முதல் மீண்டும் திறக்கப்படும். இதில் தனிப்பட்ட அல்லது ஒருவருக்கு என பயிற்சி இருக்கும். ஆனால் உடற்பயிற்சி வகுப்புகள் அல்ல.