எந்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதி தீர்மானிக்கக் கூடாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சினோபோர்ம் தடுப்பூசியின் பயன்பாடு குறித்து கருத்து தெரிவித்த அவர் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவும் தடுப்பூசிகளையும் ஆய்வு செய்ய நிபுணர்கள் குழுவும் குறித்த தடுப்பூசி ஏற்றதல்ல என முடிவு செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
சீன தடுப்பூசி குறித்து போதுமான தகவல்கள் இல்லை என்ற அதேவேளை அதிகாரிகள் இது பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல என்று கூறியுள்ள நிலையில் நமது ஜனாதிபதி ஏன் இத்தகைய தடுப்பூசிகளை இறக்குமதி செய்கிறார் என்றும் கேள்வியெழுப்பினார்.
மியன்மாரில் கூட, மக்களுக்கு எந்த தடுப்பூசி கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பவர் ஜனாதிபதி அல்ல என்றும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
தடுப்பூசி நன்கொடையாக வழங்கப்பட்டதால் அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட அவர், யாராவது எங்களுக்கு இலவசமாக விஷத்தை அனுப்பினால், அதைப் பயன்படுத்துவோமா என்றும் கேள்வியெழுப்பினார்.