ஜேர்மன் ஜனாதிபதி ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர், அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளார்.
இரத்தம் உறைதல் அச்சம் காரணமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்துவது விவாவதப் பொருளாகியுள்ள நிலையில், 65 வயதான ஜனாதிபதி ஃபிராங்க் தடுப்பூசியை பெற்றுள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) பெர்லினில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அவர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
‘தடுப்பூசி என்பது தொற்றுநோயிலிருந்து வெளியேறும் பாதையின் தீர்க்கமான படியாகும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்’ என இதன்போது அவர் கூறினார்.