ஸ்லோவோக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவோக்கியாவில் மொத்தமாக 10ஆயிரத்து 25பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 43ஆவது நாடாக விளங்கும் ஸ்லோவோக்கியாவில் இதுவரை மூன்று இலட்சத்து 65ஆயிரத்து 242பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 620பேர் பாதிக்கப்பட்டதோடு 77பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 99ஆயிரத்து 917பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 594பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்து 55ஆயிரத்து 300பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.