புத்தருக்கு முதல் அறுவடை வழங்கும் வருடாந்திர சஹால் மங்கல்ய நிகழ்வு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
அனுராதபுரத்திலுள்ள ஜெய ஸ்ரீ மகா போதியில் குறித்த நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
54ஆவது தேசிய சஹால் மங்கல்யாவை, விவசாய அமைச்சகம் மற்றும் வேளாண் சேவைகள் துறை ஆகியன இணைந்து, அட்டமாஸ்தானதிபதி டாக்டர் வென் பல்லேகம சிரினிவாச நாயக்க தேரர் வழிகாட்டலில் நடத்தின.
பெரும்பாலான விவசாயிகள், சஹால் மங்கல்யாவில் கலந்துகொண்டு, ஆசீர்வாதங்களைப் பெற்றனர். மேலும் பாரம்பரியத்தின் படி, தங்கமுலாம் பூசப்பட்ட கிண்ணத்தில் நிரப்பப்பட்ட அரிசி, ஜெய ஸ்ரீ மகா போதி முன் வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வென் தலைமையிலான மகா சங்கத்தினரின் சேத் பிரித்தின் கோஷங்களுக்கு மத்தியில் கிண்ணத்தை அரிசியில் நிரப்பும் சடங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ செய்தார்.
குறித்த நிகழ்வினை தொடர்ந்து ஜனாதிபதி, ஒன்பது மாகாணங்களைச் சேர்ந்த உழவர் சங்க பிரதிநிதிகளுக்கு துறவிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட விதை நெல்லை விநியோகித்தார்.
அத்துடன் ஸ்ரீ மகா போதிக்கு பூக்கள் மற்றும் வெள்ளி நாணயங்களை வழங்கி ஜனாதிபதி ஆசீர்வாதங்களைப் பெற்றார்.