புதிய மாறுபாடுள்ள கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததையடுத்து வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு மக்களுக்கு ரஷ்யா அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பொது சுகாதார கண்காணிப்பகத்தின் தலைவர் அன்ன பொப்போவா,
‘இதுவரை பிரித்தானியாவின் 81 கொரோனா மாதிரிகளும் மற்றும் தென்னாதபிரிக்காவின் 6 கொரோனா மாதிரிகளும் உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த பாதிப்புகள் உள்ளவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இந்த பாதிப்புகள் எல்லாம் ஐரோப்பிய, ஆசிய, தென் அமெரிக்க நாடுகளில் மற்றும் ஆபிரிக்க கண்டத்திலும் அதிக அளவில் காணப்படுகின்றன.
உலகம் முழுவதும் பிரித்தானியா மற்றும் தென்னாபிரிக்க வைரஸின் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருவது அதிகரித்து உள்ளது. இதனால், ரஷ்யர்கள் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்’ என கூறினர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ள மூன்றாவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், 45இலட்சத்து 89ஆயிரத்து 540பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 717பேர் உயிரிழந்துள்ளனர்.