தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், மதியம் ஒரு மணிவரை 39.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
இரண்டு மணித்தியாளங்களுக்கு ஒருமுறை வாக்களிப்பு நிலைவரங்கள் குறித்த அறிவிப்புகளை தேர்தல் ஆணையகம் அறிவித்து வருகிறது.
அந்தவகையில், மதியம் ஒரு மணிவரை 39.61 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 41.79 வீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்த பட்சமாக நெல்லை மாவட்டத்தில் 32.29 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதுவரை தேர்தல் அமைதியாகவே நடைபெற்று வருதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் புதுச்சேரி மாநிலத்தில் 53.01 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.