துயரமடைந்த தாய்மார்களுக்கான மன ஆரோக்கிய மையங்கள் இங்கிலாந்தைச் சுற்றி அமைக்கப்பட உள்ளன.
அடுத்த ஏப்ரல் மாதத்திற்குள் 26 தளங்கள், திறக்கப்படவுள்ளதாக இங்கிலாந்தின் பொது சுகாதார சேவை (என்.எச்.எஸ்) தெரிவித்துள்ளது.
இந்த மன ஆரோக்கிய மையத்திலுள்ள ஒரு கட்டடத்தில், உடல் சுகாதார சோதனைகள் மற்றும் உளவியல் சிகிச்சை வழங்கப்படும்.
இந்த மையங்கள் முதல் ஆண்டில் சுமார் 6,000 புதிய பெற்றோர்களுக்கு சிகிச்சை அளிக்கும் என்று என்.எச்.எஸ் தெரிவித்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தில் 40 சதவீத பகுதிகளுக்கு பிரத்யேக தாய்வழி மனநல சேவைகள் இல்லை.
மிதமான முதல் கடுமையான சிரமங்களைக் கொண்டவர்களுக்கு சேவைகளை வழங்க என்.ஹெச்.எஸ். தீர்மானித்துள்ளது.