இங்கிலாந்தில் திட்டமிட்டபடி முடக்கநிலை கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியமற்ற கடைகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் அடுத்த திங்கட்கிழமை (12ஆம் திகதி) திட்டமிட்டபடி திறப்படும்.
அத்துடன் வெளியில் சேவை செய்யும் பப்கள் மற்றும் உணவகங்கள் மீண்டும் திறக்கப்படலாம் என தெரிவித்தார்.
ஆனால், மக்கள் எச்சரிக்கையுடன் தொடர்ந்து இருக்க வேண்டுமெனவும் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் மக்களை வலியுறுத்தினார்.
மேலும், மே 17ஆம் திகதி முடக்கநிலை தளர்த்தலின் அடுத்த கட்டத்தில் சர்வதேச பயணத்தை மீண்டும் தொடங்க முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது எனவும் கூறினார்.