டெல்லியில் உள்ள 14 தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
கடந்தாண்டை விடவும் இம்முறை நாட்டின் தலைநகரில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி அரசு, அப்போலோ, உள்ளிட்ட 14 தனியார் மருத்துவமனைகளை முழுமையாக கொரோனா சிகிச்சை மருத்துவ மையமாக செயற்படுமாறு உத்தரவிட்டுள்ளது.
19 தனியார் மருத்துவமனைகள் 80 விழுக்காடு அளவிற்கும் 82 தனியார் மருத்துவமனைகள் 60 சதவிகித அளவுக்கும் ஐசியூ படுக்கை வசதிகளை, கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.



















