இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) இரவு முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமுலுக்கு வரவுள்ளது.
இது குறித்த உத்தரவுகளை அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதன்படி இன்று இரவு 8 மணி முதல் காலை ஏழு மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவசர தேவைகளுக்கா மட்டுமே பொதுமக்கள் வெளியே வருவதற்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய வாகனங்கள் தவிர ஏனைய வாகனங்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், திரையரங்குகள், உணவகங்கள் என்பனவும் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.