சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சவுதி அரேபியாவில் நான்கு இலட்சத்து 228பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 42ஆவது நாடாக விளங்கும் சவுதி அரேபியாவில் இதுவரை ஆறாயிரத்து 773பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 951பேர் பாதிக்கப்பட்டதோடு 8பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட எட்டாயிரத்து 820பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 962பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மூன்று இலட்சத்து 84ஆயிரத்து 635பேர் மீண்டு பூரண குணமடைந்துள்ளனர்.