வேல்ஸில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இப்போது முதல் கொவிட்-19 தடுப்பூசி அளவைப் பெற்றுள்ளனர்.
மொத்தம் 1,602,939பேர் முதல் அளவுகளைக் கொண்டுள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 50.8 சதவீதம் ஆகும்.
சமீபத்திய நாளில் 15,088 பேருக்கு முதல் அளவு கிடைத்ததாகவும், 8,996 பேருக்கு இரண்டாவது அளவு வழங்கப்பட்டதாகவும் பொது சுகாதார வேல்ஸ் (பி.எச்.டபிள்யூ) தெரிவித்துள்ளது.
115,800க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் (81.3சதவீதம்) இரு அளவுகளையும் பெற்றுள்ளனர்.
37,500க்கும் மேற்பட்ட சமூக பராமரிப்பு ஊழியர்களுக்கும் முழு தடுப்பூசி அளவை பெற்றுள்ளனர்.
80 வயதிற்கு மேற்பட்டவர்களில் 56.7 சதவீதம் பேர் இப்போது முழு தடுப்பூசியையும், 81.6 சதவீத பராமரிப்பு இல்லவாசிகளும் பெற்றுள்ளனர்.
75 முதல் 79 வயதுடையவர்களில் 52.5 சதவீத பேரும், 70 முதல் 74 வயதுடையவர்களில் 53.8 சதவீத பேரும் இரு அளவுகளையும் பெற்றுள்ளனர்.