ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 100 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவதாக மருந்து நிறுவனமான பயோஎன்டெக் மற்றும் ஃபைசர் தெரிவித்துள்ளது.
27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல் ஆணையமானது முன்வைத்த கோரிக்கையினை இரு நிறுவனங்களும் திங்களன்று ஏற்றுக்கொண்டது.
இந்த அறிவிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் மந்தமான மற்றும் மிகவும் விமர்சிக்கப்பட்ட தடுப்பூசி வெளியீட்டிற்கு மிகவும் தேவையான ஊக்கத்தை வழங்குகிறது.
இதன்மூலம் 2021ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கப்பட வேண்டிய மொத்த அளவுகளின் எண்ணிக்கை 600 மில்லியனாக உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் அதன் மொத்த மக்கள் தொகையான 45 கோடியில் சுமார் 10.5 கோடி பேருக்கு இதுவரை தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது.