கொழும்பு- புறக்கோட்டையிலுள்ள அரச வங்கியொன்றில் பணிபுரியும் 53 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று, இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வங்கி மூடப்பட்டு, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த வங்கிக்கு வருகை தந்தவர்கள் தொடர்பில் தகவல்கள் சேகரிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.