ஒஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒஸ்திரியாவில் இதுவரை பத்தாயிரத்து 26பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 37ஆவது நாடாக விளங்கும் ஒஸ்திரியாவில் இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்து இரண்டாயிரத்து 494பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 405பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 29பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 26ஆயிரத்து 955பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 527பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, ஐந்து இலட்சத்து 65ஆயிரத்து 513பேர் பூரண குணமடைந்துள்ளனர்.