கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் மொத்தமாக 70ஆயிரத்து 26பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் கொலம்பியாவில் இதுவரை மொத்தமாக 27இலட்சத்து 20ஆயிரத்து 619பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 19ஆயிரத்து 306பேர் பாதிக்கப்பட்டதோடு 430பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 12ஆயிரத்து 573பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஐந்தாயிரத்து 306பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 25இலட்சத்து 38ஆயிரத்து 20பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.