சிட்டகாங்கின் பன்ஷ்காலி- உபசிலாவிலுள்ள சீன ஆதரவு மின்நிலையத்தின் தொழிலாளர்கள் மீது பங்களாதேஷ் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். பன்ஷ்காலி உபசிலா நிர்பாஹி அதிகாரி (யு.என்.ஓ) சைதுஸ்மான் சவுத்ரி, இறப்புக்களின் புள்ளிவிவரங்களை உறுதிப்படுத்தியதாக டாக்கா ட்ரிப்யூன் பங்களா ட்ரிப்யூனை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையத்தின் தொழிலாளர்கள் ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருவதாக U.N.O கூறியுள்ளது.
2.4 பில்லியன் அமெரிக்க டொலர் மின் உற்பத்தி நிலையம் பங்களாதேஷுக்கு வெளிநாட்டு முதலீட்டின் முக்கிய ஆதாரமாகும். காந்தமாரா பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி எரி மின் உற்பத்தி நிலையம் எஸ்.ஆலம் குழுமத்திற்கு சொந்தமானது.
கடந்த 2016 ஆம் ஆண்டில், சீனாவின் ஷாண்டோங் மின்சார கட்டுமானக் கழகம் III, எஸ் ஆலம் குழுமத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த இடத்தில் கட்டட கட்டுமானத்திற்கு பொறுப்பான பங்களாதேஷ் கூட்டு நிறுவனமாகும்.
இத்தகைய சூழ்நிலையிலேயே ஒரு மோதல் ஏற்பட்டது. அதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என சவுத்ரி கூறினார். உள்ளூர் மக்களும் இந்த மோதலில் ஈடுபட்டுள்ளதால், இறந்தவர்கள் தொழிலாளர்களா அல்லது கிராமவாசிகளா என்பதை உடனடியாக அறிய முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை செலுத்தாதது தொடர்பாக வெள்ளிக்கிழமை முதல் பதட்டங்கள் நிலவுவதாக பன்ஷ்காலி பொலிஸ் நிலைய பொறுப்பாளர் அஜிசுல் இஸ்லாம் தெரிவித்தார்.
சனிக்கிழமை காலை, தொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் உள்ளூர் நிர்வாகத்துடன் ஒரு கூட்டத்தில் அமர்ந்து பிரச்சினையை தீர்த்துக் கொண்டனர். பின்னர், தொழிலாளர்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கச் சூடு நடத்தினர்.
கடந்த 2016 ஆம் ஆண்டில், ஒரே மின் நிலையத்தில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில், சீன மற்றும் பங்களாதேஷ் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
சீன நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்ட நிலக்கரி எரியும் ஆலை கட்டப்படும்போது தங்கள் நிலத்தை இழக்க நேரிடும் என்று எதிர்ப்பாளர்கள் அஞ்சினர். இந்த ஆலை உள்ளூர் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் என்று ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.