கியூப கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக ரவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.
89 வயதான ரவுல் காஸ்ட்ரோ, கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டாவது மாநாட்டின் முதல் நாள் உரையின் போது அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
இதன்மூலம் அவரது குடும்பத்தின் ஆறு தசாப்த கால ஆட்சி நிறைவுக்கு வருகின்றது.
அத்துடன் கியூபா 1959ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக காஸ்ட்ரோவைத் தவிர வேறு ஒருவரால் அதிகாரப்பூர்வமாக நிர்வகிக்கப்படவுள்ளது.
‘இளைய தலைமுறையினருக்கு ஆர்வமும் ஏகாதிபத்திய எதிர்ப்பு மனப்பான்மையும் நிறைந்த தலைமையை ஒப்படைப்பதாக’ அவர் இதன்போது தெரிவித்தார்.