பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 44இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 385பேர் உயிரிழந்துள்ளனர்
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் இரண்டாயிரத்து 678பேர் பாதிக்கப்பட்டதோடு 40பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 96ஆயிரத்து 349பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 261பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 41இலட்சத்து 77ஆயிரத்து 375பேர் பூரண குணமடைந்துள்ளனர்