நீதிமன்ற தீர்ப்பு குறித்த முடிவுகள் நாடாளுமன்றம் அல்லது அமைச்சரவையில் கை காண்பிப்பதன் மூலம் எடுக்கப்பட்டால் நீதித்துறை அவசியமா என மக்கள் விடுதலை முன்னணி கேள்வியெழுப்பியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் பேசிய அக்கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, இதுவரை 78 நீதிமன்ற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களிற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு ஆணைக்குழுவில் உள்ள ஊழல்வாதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை சவால் செய்ய உரிமை இல்லை என்றும் அஅநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.